விமான பயண கட்டணத்தை குறைக்க இணைந்து செயல்படணும்; முதல்வர் விஜய்க்கு மத்திய அமைச்சர் நன்றி

புதுடில்லி: விமான எரிபொருள மீதான வாட் வரியை குறைக்கும் தமிழக அரசின் முடிவை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வரவேற்றுள்ளார்.

அவரது பதிவு: விமான எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்கிறேன்; இது விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு நல்ல முன்னேற்றமாகும் . இந்த நடவடிக்கையை மேற்கொண்ட

முதல்வர் விஜய்க்கு நன்றி.

விமானப் பயணத்தை மேலும் மலிவானதாக மாற்ற, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். பயணிகளின் நலனே எப்போதும் நமது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.

@block_P@

இண்டிகோ வரவேற்பு



அதன் அறிக்கை: விமான எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்கும் தமிழக அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். முதல்வர் விஜய்க்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, இந்தியாவின் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும். விமானப் பயணத்தை இன்னும் பலருக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாக மாற்றும் என்று நம்புகிறோம். இவ்வாறு இண்டிகோ கூறியுள்ளது.block_P

Advertisement