தமிழகத்தில் பரவலாக மழை; நீலகிரியில் கொட்டியது கனமழை

2

-நமது நிருபர்-

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய வளி மண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி இருக்கிறது; நாளை மறுநாள் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நீலகிரியில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று (அக்டோபர் 24) காலை 7:00 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பதிவான அதிகபட்ச மழை பொழிவு மில்லி மீட்டரில்…

* ஊட்டி- 40

Tamil News
* நடுவட்டம்- 46

* கிளன்மார்கன்- 30

* கல்லட்டி- 21

* பார்சன் வேலி- 42

* போர்த்திமுந்து- 27

* குந்தா- 74

* அவலாஞ்சி- 38

* எமரால்டு- 52

* கெத்தை- 84

* கிண்ணக்கொரை- 66

* அப்பர் பவானி- 28

* பாலகுலா- 67

* குன்னூர்- 81

* பர்லியார்- 250

* கேட்டி- 48

* குன்னூர் ரூரல்- 75

* ஹலிக்கல்- 52

* எடப்பள்ளி- 161

* கோத்தகிரி- 137

* கொடநாடு- 81

* கீழ் கோத்தகிரி- 200

* கூடலூர்- 35

* அப்பர் கூடலூர்- 33

* தேவாலா- 82

* செருமுள்ளி- 48

* பாடான்துறை- 47

* ஓவேலி- 68

* பந்தலூர்- 57

* சேரங்கோடு- 52

பள்ளிகளுக்கு விடுமுறை

நேற்று இரவு முதல் பெய்த மழையின் காரணமாக, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர்ஆகிய வட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
@block_G@

ஆரஞ்சு அலெர்ட்



திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கன மழை பெய்யக்கூடும். இதற்கான, 'ஆரஞ்சு அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.block_G@block_Y



@

மஞ்சள் அலெர்ட்



ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலுார், அரியலுார், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை , கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.block_Y@block_P@

போக்குவரத்து பாதிப்பு



வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு இடியுடன் பெய்த கனமழைக்கு மஞ்சூர் - கோவை சாலையில் பெரும்பள்ளத்தில் ராட்சத பாறை சரிந்து சாலை நடுவே விழுந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் உதவியுடன் சாலை நடுவே இருந்த பாறையை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். சில இடங்களில் அபாயகரமான பாறைகளால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது; நெடுஞ்சாலைத்துறையினர் அடையாளம் கண்டு பாறைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.block_P

Advertisement