வார இறுதி நாள் இன்றைய நிலவரம்; 5 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 சரிந்த தங்கம் விலை சற்று உயர்வு
-நமது சிறப்பு நிருபர்-
சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த திங்கள் கிழமை (அக்டோபர் 19) தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய அதிகரித்து 13,570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
செவ்வாய் கிழமை (அக்டோபர் 20) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 490 ரூபாய்க்கும் விற்பனைஆனது. வெள்ளி விலை ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
புதன் கிழமை (அக் 21) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 390 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 230 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை (அக்டோபர் 22) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 235 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 225 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரம்
நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 175 ரூபாய் குறைந்து 13,060 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 4,080 ரூபாய் சரிந்தது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 225 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
இன்றைய நிலவரம்
இன்று (அக்டோபர் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 13,070 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி நிலவரம்
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 220 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வார இறுதி நாளில் தங்கம் விலை கூடுவதையே வழக்கமாக வைத்துள்ளதுமேலும்
-
பறவைகள் சரணாலயப்பணி 4 ஆண்டுகளாக முடக்கம்
-
ஏலம் எடுத்த குத்தகைதாரரிடமே சந்தையை ஒப்படைக்க உத்தரவு
-
வீட்டில் தீய சக்தியை விரட்டுவதாக 28 சவரன் நகை, ரூ.12 லட்சம் பறிப்பு: ஓசூரில் ஒரு குடும்பத்தையே 4 மாதம் வீட்டு சிறை வைத்த ஆசாமி
-
குப்பையில் இருந்து மின் உற்பத்தி திட்டம் சேலத்தில் வர விட மாட்டோம்: சவுமியா
-
வெறிநாய் கடித்து 15 பேர் காயம்
-
மாயமான 1 வயது பெண் குழந்தை தேடுவதில் நீடிக்கும் சிக்கல்