ஊக்கம் அளிக்கும் தன்னலமற்ற சேவை; இந்தோ-திபெத் எல்லை காவல் படைக்கு பிரதமர் மோடி பாராட்டு
-நமது சிறப்பு நிருபர்-
இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் நிறுவன தினம் இன்று (அக்டோபர் 24). பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவு: இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வீரத்தின் மூலம் தனி முத்திரை பதித்துள்ளனர்.
ஒவ்வொரு சவாலையும் உறுதியுடன் எதிர்கொண்டு வந்துள்ளனர். தன்னலமற்ற சேவையும் தியாகங்களும் தேசத்திற்குப் பெரும் ஊக்கமளிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷா
இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் நிறுவன தினம் வாழ்த்துகள். பனி படர்ந்த மலைகளில் அவர்களின் வீர முழக்கம் எதிரொலிக்கிறது; நம் நாட்டின் பாதுகாப்பிற்கு வரும் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குகிறது. மிகக் கடுமையான காலநிலையிலும் அவர்கள் உறுதியுடன் செயல்படுகின்றனர். நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம்.
பாதுகாப்பு துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்
இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினர் மிகக் கடுமையான தட்பவெப்ப நிலைகளிலும் இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் உட்பட, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு பணிகளிலும் முக்கிய பங்காற்றி இருக்கின்றனர். அவர்கள் துணிச்சல், அர்ப்பணிப்பு உடன் நாட்டிற்குச் சேவை செய்கின்றனர்.
வீரர்களுக்கு வாழ்த்துகள்
நம் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்
அந்த காவல் படையில் எல்லா மதத்தினரும் இருக்கிறார்களா ??
Why Mr Ali, you want to join and save India, please join, you are most welcomeமேலும்
-
முன்னாள் தலைமை செயலர் சுகவனேஸ்வர் காலமானார்; முதல்வர் விஜய் இரங்கல்
-
புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் உறவு தனிப்பிரிவு ஏட்டு மீது போலீஸ் வழக்கு
-
போலீஸ் பற்றாக்குறையால் டோக்கன் பணி நிறுத்தம்
-
அரிசி விலை உயர்வால் சாகுபடி செய்த நெல்லை பயன்படுத்தும் விவசாயிகள்
-
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
-
பரோலில் வந்து தலைமறைவான நபர் அந்தமானில் கைது