குளோரின் கலந்த குடிநீர் வினியோகிக்க வேண்டும் காஞ்சி கலெக்டர் உத்தரவு

வாலாஜாபாத்: ‘உங்களைத் தேடி; உங்கள் ஊரில்’ முகாமில், பூசிவாக்கம் மேல்நிலை நீர் தொட்டியில், குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.

வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் மேல்நிலை நீர் தொட்டியில், கட்டாயமாக குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.

இதையடுத்து, ரேஷன் கடையில் இருப்பு மற்றும் ரேஷன் பொருட்களை ஆய்வு செய்தார். மேலும், ரயில் இருப்பு பாதையில் நடைபெறும் வளர்ச்சி பணி, வல்லப்பாக்கம் பகுதியில் தரைப்பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்தார்.

தென்னேரி அரசு ஆரம்ப மருத்துவ நிலையத்தில் கர்ப்பிணியருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் தடுப்பூசி விபரங்களை கேட்டறிந்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ, கூடுதல் கலெக்டர்கள் ஆசிக் அலி, புவனேஷ் ராம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement