வீட்டு வரி நிர்ணயிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி பில் கலெக்டர் கைது
கோவை: வீட்டு வரி நிர்ணயம் செய்வதற்கு, 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, கோவை மாநகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்டார்.
கோவை, இடையர்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் சந்தோஷ். கட்டட ஒப்பந்தாரர். இவர், கவுண்டம்பாளையம் அருகேயுள்ள வெள்ளகிணறு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்வருக்கு புதிய வீடு கட்டி கொடுத்துள்ளார்.
இந்த வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்ய வடக்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இது தொடர்பாக கட்டட கான்ட்ராக்டர் சந்தோஷ், வடக்கு மண்டல அலுவலகம் சென்று வரி வசூலர் பிரதீப்,35, என்பவரை சந்தித்தார். அப்போது, வரி நிர்ணயம் செய்ய பிரதீப், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இவ்வளவு பணம் தர முடியாது என்று சந்தோஷ் கூறிய போது, 10 ஆயிரம் ரூபாய் குறைத்து கொடுக்குமாறு பிரதீப் கூறியிருக்கிறார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தல் படி, வடக்கு மண்டல அலுவலகம் சென்று, பிரதீப்பிடம் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். பிரதீப் பெற்றுக் கொண்டபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வாழ்ந்தால் இவனைப் போல் வாழனும் அரசு வேலையில்மேலும்
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்