கடலுார் சில்வர் பீச்சில் நிறுவப்பட்ட அழகு சிலை 2 ஆண்டில் இடித்து தரைமட்டம்: வரிப்பணம் விரயம்

இந்த செய்தியை அவசியம் சேர்க்கவும்...................படம் வருகிறது.

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் கட்டப்பட்ட அழகான சிலை 2 ஆண்டுகளில் இடித்து அகற்றப்பட்டு வருவதால் மக்களின் வரிப்பணம் விரையமாகிறது.

கடலுார் சில்வர் பீச்சில் கடந்த 2 ஆண்டிற்கு முன் ரூ.5 கோடி செலவில் பேவர் பிளாக் தரை, சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், முகப்பில் அழகு சிலை உட்பட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சிலை இதற்கு முன்பு மாநகராட்சி கமிஷனராக இருந்த அனு, தனது பெரு முயற்சியால் ஆஸ்திரேலியாவில் இருந்து வடிவமைப்பு பிளான் பெற்று, அதை ஒரே கல்லில் வித்தியாசமான வடிவத்தில் குஜராத் மாநிலத்தில் செதுக்கி இந்த சிலை வைக்கப்பட்டிருந்தது. வேலைப்பாடு மிக்க இந்த சிலையால் சில்வர் பீச் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சி தந்தது.

தற்போது கமிஷனராக கிஷன்குமார் பொறுப்பேற்றுள்ளார். இந்த அழகான சிலையை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு என்.எல்.சி., சார்பில் புதிதாக சிலை வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் இத்தன கோடி செலவு செய்து வைக்கப்பட்டு 2 ஆண்டுகளே முடிந்த நிலையில் அழகான சிலை அகற்ற வேண்டுமா என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் வேறு சிலை வைக்க வேண்டுமென்றால் பறந்த இடமுள்ள சில்வர் பீச்சில் வேறு இடத்தில் நிறுவலாமே. அதை விடுத்து சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில்தான் வேறு சிலை வைக்க வேண்டும் என்பதில் என்ன உள்நோக்கம் உள்ளது என்பது தெரியவில்லை. மாநகராட்சியில் நிதி நெருக்கடி என்று கூறிவிட்டு பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிலையை அகற்றப்பட்டுள்ளதால் அரச பணம் விரையமாகி வருகிறது.

Advertisement