கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே கஞ்சா பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோட்டக்குப்பம் ஜெமித் நகர் தோப்பில் கஞ்சா விற்கப்படுவதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் இன்று அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை நடத்தினர்.

அதில் அவர் ஒரு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெரிய கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித் மகன் மதன், 22; என்பதும், கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement