7 நிபந்தனைகளை ஏற்கும் வரை அமெரிக்காவுடன் பேச்சு இல்லை: ஈரான் திட்டவட்டம்
டெஹ்ரான்: நிபந்தனைகளை ஏற்கும் வரை அமெரிக்காவுடன் சமாதான பேச்சு கிடையாது' என, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான், பாக். ராணுவத் தளபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக, கடந்த பிப்.,ல் அமெரிக்கா போரைத் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே, பாக். மத்தியஸ்தம் செய்து வருகிறது. கடந்த ஜூனில் பாக். மேற்கொண்ட சமரச முயற்சியால் தற்காலிக அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. சில வாரங்களிலேயே மீண்டும் மோதல் வெடித்ததால் ஒப்பந்தம் தோல்வியடைந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், ஈரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான், பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார்.
அப்போது, 'துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவது, எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை நீக்குவது, பிராந்திய போர் பதற்றத்தை தணிப்பது உள்ளிட்ட 7 நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை, அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது' என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செறிவூட்டப்பட்ட அனைத்து அணுப் பொருட்களும் ஈரானிலேயே இருக்கும் என உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் நிலைப்பாட்டை அதிபர் மசூத் பெஷெஸ்கியான் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும்
-
மீண்டும் ஒரு புலி கூண்டில் சிக்கியது
-
சவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீதான தாக்குதலில் இருவர் பலி; அமெரிக்க அதிகாரிகள் வெளியேற உத்தரவு
-
சவுதி விமான நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் படுகாயம்
-
விவசாயிகள் மறியல் போராட்டம்
-
தான்தோன்றிமலை கோவில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரத்துவங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி
-
கால்நடை ஆராய்ச்சி மையத்தில் நாளை வெள்ளாடு பயிற்சி