10 நாட்கள் கடந்தும் திணறும் போலீஸ்; செஞ்சி சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த உள்ள ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ப்ரியா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) அக். 11ம் தேதி பிறந்த நாளை கொண்டாடி விட்டு தாயாருடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த போது மாயமானார். இதுகுறித்து போலீசில் தாய் புகார் அளித்தார்.
சிறுமியை கண்டுபிடிக்க போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். எஸ்பி நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
மொபைல் போன் தொடர்புகள் மற்றும் டவர் தகவல்களை ஆய்வு செய்தபோது, சிறுமி காணாமல் போன இரவு இரண்டு பேர் நீண்ட நேரம் மொபைல் போனில் பேசி உள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
சிறுமி காணாமல் போய் 10 நாட்கள் கடந்தும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை