திருவள்ளூரில் கொட்டிய பருவமழை தாமரைப்பாக்கத்தில் 9.4 செ.மீ, பதிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து, நேற்று இரவு முதல் இன்று மாலை வரை, கன மழை கொட்டித் தீர்த்தது. மாவட்டத்தில், அதிகபட்சமாக தாமரைப்பாக்கம் பகுதியில், 9.4 செ.மீட்டர் மழை பதிவாகியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த, 15ம் தேதி துவங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில், பருவமழை துவங்கிய முதல் நாளில், ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, சில நாட்கள் மழை பெய்யாத நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டிருந்த, கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெற்றது.

இந்த நிலையில், நேற்று மாலை முதல், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவாலங்காடு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை, பெரியபாளயைம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில், அதிகபட்சமாக தாமரைப்பாக்கம் பகுதியில், 9.4 செ.மீட்டர் மழை பதிவாகியது. இதையடுத்து, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில், கலெக்டர் கவிதா தலைமையிலான அதிகாரிகள், நேரில் பார்வையிட்டு, வடிகால்வாய்களை துார் வாரி சீரமைத்து வருகின்றனர்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைக்காக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

@block_B@மாவட்டத்தில் பெய்த மழை அளவு:

இடம் –மழையளவு (செ.மீட்டரில்)

தாமரைப்பாக்கம் –9.4

ஊத்துக்கோட்டை –8.7

சோழவரம் –7.6

செங்குன்றம் –7.2

பூண்டி –6.1

கும்முடிப்பூண்டி –6.0

பொன்னேரி –5.9

பூந்தமல்லி –5.4

திருவள்ளூர் –5.1

ஜமீன் கொரட்டூர் –2.8block_B

@block_B@

அவசர கால கட்டுப்பாட்டு அறை



திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வெள்ள நீர் பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க, பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக, அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், தங்கள் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தால், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தகவல் அளிக்கலாம்.

கட்டணமில்லா தொலைபேசி –1077

தொலைபேசி எண்கள் – 044 27664177, 27666746, 27660035, 27660036

வாட்ஸ் ஆப் எண் –94443 17862, 94989 01077.block_B

Advertisement