மழை நீர் தேங்கிய பகுதிகளில் எம்.எல்.ஏ., விஜயராஜ் ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில், த.வெ.க., – எம்.எல்.ஏ., விஜயராஜ் இன்று ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதில், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தாழம்பூர், நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த மழைநீரானது காலியிடங்களில் தேங்கியுள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ருதி, திருப்போரூர் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., விஜயராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தேங்கும் நிலை ஏற்பட்டால் உடனே அகற்றவும், அதற்கான நீர்போக்கு வடிகால்வாய் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டனர்.

Advertisement