பருவ மழை கண்காணிப்பு பணியில் கவனம் செலுத்த கலெக்டர் உத்தரவு
செங்கல்பட்டு: ‘‘கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், மழைநீர் கால்வாயிலும், குடியிருப்பு பகுதிகளில், மழைநீர் தேங்காமல் சீராக செல்லும் வகையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என, அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் இன்று, உத்தரவிட்டார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் காயரம்பேடு ஊராட்சி பகுதியில், கலெக்டர் வீரப்பன், இன்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் கலெ க்டர் வீரப்பன் பேசியதாவது:
மீனாட்சி நகர் பகுதியில் உள்ள, வல்லாஞ்சேரி உபரி நீர் கால்வாய் அடைப்பு ஏற்படாதவாறு, கண்காணிக்க வேண்டும்.
நந்திவரம் – கூடுவாஞ்சேரி வைகுண்டன் குடியிருப்பு அருகில் செல்லும், மண்ணிவாக்கம் ஏரியின் வரத்து வாய்க்கால், ஊரப்பாக்கம் ஏரி, கூடுவாஞ்சேரி மஹாலட்சுமி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், மழைநீர் தேங்காமல் சீராக செல்ல, நீர்வளத்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
காயரம்பேடு ஊராட்சியில், விஷ்ணுபிரியா நகரில், மழைநீர் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மழைநீர் அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெள்ள நிவாரண முகாம்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வின்போது, செங்கல்பட்டு த.வெ.க., – எம்.எல்.ஏ., தியாகராஜன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடாசலம், நகராட்சி ஆணையர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும்
-
மீண்டும் ஒரு புலி கூண்டில் சிக்கியது
-
சவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீதான தாக்குதலில் இருவர் பலி; அமெரிக்க அதிகாரிகள் வெளியேற உத்தரவு
-
சவுதி விமான நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் படுகாயம்
-
விவசாயிகள் மறியல் போராட்டம்
-
தான்தோன்றிமலை கோவில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரத்துவங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி
-
கால்நடை ஆராய்ச்சி மையத்தில் நாளை வெள்ளாடு பயிற்சி