என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கல்
நெய்வேலி: என்.எல்.சி.,யில் பணியாற்றிவரும் இன்கோசர்வ் சொசைட்டி மற்றும் ஹவுசிகோஸ் தொழிலாளர்களுக்கு இன்று தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.
என்.எல்.சி., நிறுவனத்தில் பணியாற்றி வரும் இன்கோசர்வ் சொசைட்டி, ஹவுசி கோஸ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி தொ.மு.ச., தலைமையிலான 10 சங்க கூட்டமைப்பினர் மற்றும் என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், என்.எல்.சி., நிர்வாகம் வழக்கம்போல் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்த 8.33 சதவீத போனஸ் மற்றும் கருணை தொகையை வழங்குவதாக அறிவித்து, இன்று மாலை சொசைட்டி மற்றும் ஹவுசிகோஸ் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கியது.
ஆனால் இந்த போனஸ் தொகையை ஏற்க மறுப்பதுடன், லாபத்தில் பங்கு எனற அடிப்படையில் போனஸ், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச., தலைமையிலான தொழிற்சங்க கூட்டமைப்பினர் மற்றும் ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், என்.எல்.சி.,யில் பணியாற்றிவரும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களுக்கு விரைவில் தீபாவளி போனஸ் வழங்கப்பட உள்ளது.
மேலும்
-
தேச விரோத கருத்துக்களை செய்தியாக ஒளிபரப்பக் கூடாது: டிவி நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
-
தி.மு.க., 'மாஜி'க்களை விட்டுவிட்டு என்னை மட்டும் விமர்சிக்கின்றனர்: அமைச்சர் வெங்கடரமணன் ஆதங்கம்
-
'வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி': பாஜ குற்றச்சாட்டு
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை