தொழிலாளியை தாக்கியவர் கைது

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலா பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன், 45. அதே பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் கிரண்குமார், 25; கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் கடந்த, 19ல், மெட்டாலாவில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, கிரண்குமார், பத்மநாபனிடம் தனக்கு மது வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் பத்மநாபன் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த கிரண்குமார் அவரிடம், ''பணம் இல்லை என்று கூறிவிட்டு நீ எப்படி மது குடித்தாய்,'' எனக் கேட்டு தகராறு செய்தார். இதில் வாக்குவாதம் முற்றி கிரண்குமார் பத்மநாபனை தாக்கினார். இதில் அவர் காயம் அடைந்தார்.
காயமடைந்த பத்மநாபனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பத்மநாபன் அளித்த புகார்படி, ஆயில்பட்டி போலீசார் கிரண்
குமாரை, நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement