உ.பி.,யில் மின்சாரம் தாக்கிய 3 பேர் பலி; துர்கா சிலை ஊர்வலத்தின் போது சோகம்

லக்னோ: உத்தரபிரசதேசத்தின் கோரக்பூரில் துர்கா பூஜை திருவிழா கோலாகலமாக நடந்தது. முக்கிய நிகழ்வான துர்கா சிலை கரைப்பதற்காக, நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

டிராக்டரில் இருந்த இரும்புக்கம்பி மேலே சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் உரசியது. இதனால் ஏற்பட்ட மின்சாரம் தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல, பதேபூரில் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். அனுமதிக்கப்படாத இடங்களில் சிலைகளைக் கரைப்பதைத் தவிர்க்குமாறு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

Advertisement