பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 15வது தங்கம்; வட்டு எறிதலில் ஸ்வர்னா ராஜ் அசத்தல்
அய்ச்சி நகோயா : ஜப்பானின் அய்ச்சி நகோயாவில் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்வர்னா ராஜ் தங்கம் வென்று அசத்தினார். அதிகபட்சமாக 15.66 மீட்டர் தொலைவுக்கு எறிந்து இந்தப் பதக்கத்தை அவர் கைப்பற்றினர். ஈரானின் ஷாலா ஹதிதி 15.45 மீட்டர் வீசி வெள்ளியும், வியட்நாம் நிகுவென் தி (14.65 மீ) வெண்கலமும் வென்றனர்.
கலப்பு இரட்டையர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் மனிஷா ராம்தாஸ் மற்றும் பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்தை வென்றது. மேலும், வில்வித்தை பிரிவில் இந்தியாவின் சுவாதி சவுத்ரி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதுவரையில் 15 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலம் என 67 பதக்கங்களுடன் இந்தியா, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல்; சகோதரிகள் 3 பேர் கைது
-
தொடர்ந்து சரிவடையும் தங்கம் விலை; 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 சரிவு
-
தமிழகத்தில் பரவலாக பெய்தது மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்கு ஸ்கெட்ச்; டைகர் ஷெராப் வழக்கில் வெளியான பகீர் தகவல்
-
ராஜராஜ சோழனின் சதய விழாவை இருட்டடிப்பு செய்திடக் கூடாது; ஸ்டாலின் வலியுறுத்தல்
-
பஞ்சாபில் ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் கைது; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
Advertisement
Advertisement