ஊர் பெயர் தெரியவில்லை சிரமப்படும் பயணிகள்

பந்தலுார்: பந்தலுார் வழியாக இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்களில், டிஜிட்டல் பெயர் பலகை இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

அரசு போக்குவரத்து கழக, கூடலுார் கிளைலிருந்து பந்தலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஊர் பெயர்கள் பலகைகளில் எழுதி, பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட்டு இருப்பது வழக்கம். தற்போது, புதிய பஸ்கள் இயக்க துவங்கிய நிலையில், அனைத்து ஊர்களின் பெயர் பலகைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது டிஜிட்டல் பெயர் பலகைகள் பெரும்பாலான பஸ்களில் பழுதடைந்து, மீண்டும் பலகைகளில் ஊரின் பெயர்கள் எழுதப்பட்டு, வைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

பெயர் பலகைக வைக்க இடம் இல்லாத நிலையில், பயணிகளுக்கு தெரியாத வகையில், ஓரப்பகுதியில் வைப்பதால், டிஜிட்டல் பெயர் பலகையை பார்க்கும் பயணிகள், பஸ் எங்கு செல்கிறது என்று தெரியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே, பழுதடைந்த டிஜிட்டல் பெயர் பலகைகளை சீரமைத்து, பஸ்களை இயக்க வேண்டும்.

Advertisement