எனது குழந்தைகள் ஐஏஎஸ் ஆவதை விரும்பவில்லை: காரணத்தை விளக்குகிறார் துக்காராம்
- நமது நிருபர் -
மஹாராஷ்டிராவில் உணவு பாதுகாப்பு ஆணையராக சமீபத்தில் துக்காராம், பொறுப்பு ஏற்றார். அந்நாள் வரை அமைதியாக செயல்பட்டு வந்த அத்துறை வேகம் காட்டியது. உணவு பாதுகாப்பில் சமரசம் செய்யாத துக்காராம் சிறிய உணவகம், பெரிய உணவகம் என பாரபட்சம் பார்க்காமல் சோதனை நடத்தினார். குறைபாடு உள்ள உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. பல உணவகங்களுக்கு அபராதம் விதித்தார். இதனால், உணவின் தூய்மை குறித்து நாடு முழுதும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டது.
அதேநேரத்தில் 2005ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த துக்காராம், 21 ஆண்டுகளில் 25 முறை இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், அவரது குடும்பமும் அடிக்கடி இடம்பெயர்ந்தது. அவரது மகன் 5ம் வகுப்பு செல்வதற்குள் 6 பள்ளிகளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், சர்வதேச மராத்தா வர்த்தக கணகாட்சியில் துக்காராம் பேசியதாவது: எனது குழந்தைகள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் ஆக வேண்டும் என அறிவுறுத்த மாட்டேன். பொது சேவையை நிராகரிக்க வேண்டும் எனக்கூறவில்லை. மாறாக, சமூகத்திற்கு பெரியளவில் பங்காற்ற வேண்டும்.
பாரம்பரிய கட்டமைப்புகளை தாண்டி, புதிய வாய்ப்புகளை தேடவும், உருவாக்கும் திறமை, ஆற்றல், அறிவு ஆகியன இளம் தலைமுறையினரிடம் உண்டு. தொழில்முனைவோர் மற்றும் பொது வாழ்க்கையில் தலைமை பண்பு ஆகியன புதிய கொள்கைகளை உருவாக்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தவும் பெரிய சுதந்திரத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஐஏஎஸ் ஆனா பாமர, குடாக்கு, கைநாட்டு அரசியல்வாதிகளுக்கு கொள்ளையடிக்க கத்துக்கொடுக்கணும் ... ஆனா சிக்கிக்க வாய்ப்பு உருவாயிட்டா அரசியல்வாதியைக் காப்பாத்த தன்னையே பலிகொடுத்துக்கணும் .... இந்த அசிங்கத்தை விட பெரிய அசிங்கம் ஐஏஎஸ் ல வேற எதுவுமே இல்ல .....
நல்ல ஒட்டல் வெச்சுக்குடுங்க.
Most Required Good Officers While 95%UselessOverFattenedWaste Officers Must be Sacked& Punished for PowerMisuses& MegaLoots
TNPSC தேர்வு பயிற்சி நிறுவனம் நடத்துபவர் ஒருவர் சமீப ஆண்டுகளில் ஒரு பிராமண இளைஞர் கூட சேர வரவில்லை எனக் கூறினார். எல்லா அரசுத் துறைகளிலும் சாதி வெறுப்பு தாண்டவமாடுகிறது எனும் அச்சம்தான்.
நான் ஒருத்தன். ஐ . ஏ. எஸ் ஆகி. அதனால். நானும், என். குடும்பமும். படும். பாடு. போதாதா, இதில் என். மகனும். அவன். வருங்கால. சந்ததியும். வேறு. இதே. பாட்டைப். பட. வேண்டுமா. என்று. தோன்றியிருக்கும் என்ன செய்வது, நேர்மைக்கு என்றும். சோதனைகள். அதிகம்தான்
ஒரு உண்மையான அதிகாரியை வேலை செய்ய விடமாட்டாங்க இவருக்கு ப்ரோமோஷன் குடுக்காம இப்படி அடிக்கடி மாற்றி சித்தரத்தை செய்வாங்க பசங்க குடும்பம் சிரம படக்கூடாதுனு நான் வெளிநாட்டில் ஒரு company கு சுயநலத்தோடு செய்வது ஒரு வாழ்கை , இந்த மனிதர் நாட்டுக்காக தன் குடும்ப சிரமத்தை தாக்கிக்கொண்டு வேலை செய்வது இனொரு வாழ்கை . இந்த மாதிரி நன்மனிதர்களுக்கு நம் நாட்டில் மதிப்பு இல்ல
ஒரு உண்மையான அதிகாரியை வேலை செய்ய விடமாட்டாங்க இவருக்கு ப்ரோமோஷன் குடுக்காம இப்படி அடிக்கடி மாற்றி சித்தரத்தை செய்வாங்க பசங்க குடும்பம் சிரம படக்கூடாதுனு நான் வெளிநாட்டில் ஒரு company கு சுயநலத்தோடு செய்வது ஒரு வாழ்கை , இந்த மனிதர் நாட்டுக்காக தன் குடும்ப சிரமத்தை தாக்கிக்கொண்டு வேலை செய்வது இனொரு வாழ்கை . இந்த மாதிரி நன்மனிதர்களுக்கு நம் நாட்டில் மதிப்பு இல்ல
உண்மை தான் சார், பெரும்பாலான மக்கள் பச்சோந்திகள் தன் தேவைக்கேற்ப மாறுவார்கள், கடைசியில் கஷ்டம் படுவது உங்களைப் போன்ற நல்லவர்கள்
Yes. IAS IPS அரசு டாக்டர்களாக தங்கள் வாரிசுகளை கொண்டுவர பெரும்பாலான Forward cost பெற்றோர்கள் விரும்புவதில்லை.
காமராஜர் ன்னு ஒரு உன்னத மனுஷனை திருட்டு தீயமுக கும்பல் இல்லாததையும் பொல்லாத தையும் சொல்லி பொய் பிரச்சாரம் பண்ணி என்னிக்கு இறக்கினான்களோ அன்னிக்கு அவரோடவே ஐ ஏ எஸ் க்குன்ன இருந்து மரியாதையும் சேர்ந்து போச்சு. இன்னிக்கு வரைக்கும் அது திரும்ப வரவே இல்லை. அவர் மகன் 5ம் வகுப்பு செல்வதற்குள் 6 பள்ளிகளுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஐ ஏ எஸ் லட்சணம் அரசியல் வியாதிகளின் கைக்குள் போனப்பறம் 6 பள்ளிகள் ஒரு விஷயமே இல்லை. துக்காராம் ஒரு நவீன சேஷன். அவருக்கு எங்கள் சல்யூட்.