கரப்பான் பூச்சி வீட்டுக்கு கேடு; பா.ஜ., ஆர்ப்பாட்டம்
அன்னூர்: அன்னூரில் தேச பக்தர்கள் பேரவை சார்பில், டில்லியில் நடைபெறும் போராட்டங்களுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் நடந்தது .
பா.ஜ., விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே. நாகராஜ் பேசியதாவது:
டில்லியில் போராட்டம் என்ற பெயரில் காவலர்கள் தாக்கப்படுகின்றனர் . பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சிப்பதை இந்த தேசம் ஏற்று கொள்ளாது.
இளைஞர் அமைப்பு எனக் கூறிக்கொள்ளும் அமைப்பின் பின்னணியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளது.
போராட்டங்களுக்கு வெளிநாட்டு நிதி வருகிறதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
இந்தியாவின் வளர்ச்சியை இதுபோன்ற போராட்டங்களால் தடுக்க முடியாது இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பா.ஜ, நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, போராட்டங்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement