கண்காட்சி கார்னர் ‘தி பேட்டரி ஷோ இந்தியா 2026’
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேட்டரி உற்பத்தி மற்றும் எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பங்களை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தும் ‘ரினியூயபிள் எனர்ஜி இந்தியா எக்ஸ்போ 2026’ மற்றும் ‘தி பேட்டரி ஷோ இந்தியா 2026’, கிரேட்டர் நொய்டாவில் அக்.22 முதல் 24ம் தேதி வரை நடைபெறுகின்றன. 1,080க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
என்ன பார்க்கலாம்?
*சூரிய மின் தகடுகள் மற்றும் உபகரணங்கள்
* பேட்டரி உற்பத்தி தொழில்நுட்பங்கள்
* எரிசக்தி சேமிப்பு அமைப்புகள்
* பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்கள்
* மின்சார வாகன சார்ஜிங் வசதிகள்
* ஸ்மார்ட் கிரிட் மற்றும் உயிரி எரிசக்தி தீர்வுகள்
யாருக்கு பயன்படும்?
சூரிய மின் சாதன உற்பத்தியாளர்கள், பேட்டரி நிறுவனங்கள், மின் சாதன உற்பத்தியாளர்கள், உதிரிபாக சப்ளையர்கள், திட்ட மேம்பாட்டாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை தேடும் சிறு நிறுவனங்களுக்கு பயன்படும்.
என்ன பயன்?
புதிய தொழில்நுட்பங்களை நேரில் அறியவும், பெரிய நிறுவனங்களின் உதிரிபாக தேவைகளை புரிந்துகொள்ளவும், புதிய சப்ளையர்கள் மற்றும் வணிக தொடர்புகளை உருவாக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
விபரங்கள்:
நாள்: அக்டோபர் 22 முதல் 24 வரை
இடம்: இந்தியா எக்ஸ்போ மார்ட், நொய்டா
பதிவு கட்டணம்: ரூ. 1000 முதல் 30,000 வரை
இணையதளம்: renewableenergyindiaexpo.com
மேலும்
-
தூக்கு தண்டனை விதிப்பது ஏன்: சொல்கிறார் போக்சோ கோர்ட் நீதிபதி
-
தாவூத் இப்ராஹிம் கும்பல்: ஐ.நா., அறிக்கைக்கு இந்தியா கண்டனம்
-
விருத்தாசலத்தில் போக்குவரத்து பாதிப்பு அதிகரிப்பு பிரதான சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படுமா
-
பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
-
கால்நடை வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்
-
கோயில் அருகே ரோடு சேதம்: மக்கள் சிரமம்