தாவூத் இப்ராஹிம் கும்பல்: ஐ.நா., அறிக்கைக்கு இந்தியா கண்டனம்
புதுடில்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் டி-கம்பெனியை, இந்தியாவை சேர்ந்த கும்பல் என குறிப்பிட்ட ஐ.நா., அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில், இந்தியாவின் நிரந்தர தூதரக செயலர் ரகு பூரி கூறுகையில், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளின்போது மனித உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து, ஐ.நா., சிறப்பு பிரதிநிதி பென் சவுல் வெளியிட்ட அறிக்கையில், உண்மைக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் இருந்து தப்பி சென்ற பின்னரே, ஒசாமா பின்லேடனுடனான தொடர்பு காரணமாக, ஐ.நா., தடை பட்டியலில் சேர்க்கப்பட்டதாக ரகு பூரி தெரிவித்தார்.
ஒசாமா பின்லேடன் இருந்த பாகிஸ்தானில் தான் தாவூத் இப்ராஹிமும் வசிப்பதாக குறிப்பிட்ட அவர், உண்மை தகவல்களை சரிபார்க்காமல் ஐ.நா., பிரதிநிதி அறிக்கைகளை வெளியிடுவது, நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என கூறினார்.
ஐ.நா., அறிக்கைகள் நடுநிலையுடனும் துல்லியமாகவும் இருக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும்
-
விளைநிலங்களில் என்.எல்.சி., மண் குவியல் தேக்கம்: கம்மாபுரம் அருகே விவசாயிகள் மறியல்
-
புத்தக வாசிப்பு சமூகத்தை புரிந்து கொள்ள உதவும்
-
மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.9 ஆயிரம் பறிமுதல்
-
மேலுார் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு
-
பாகிஸ்தானில் காஸ் சிலிண்டர் விலை ரூ.3,500ஆக உயர்வு
-
அடிப்படை வசதிகள் மேம்படுத்த ஆய்வு: தினமலர் செய்தி எதிரொலி