தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தினமும் பல மாவட்டங்களில் இரவு, பகல் என விடாது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த மழை காலத்தின் முதல் புயல் நாளை உருவாக இருக்கிறது. தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிகைகளையும் எடுக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியிருந்தார்.
தற்போது, சென்னை தலைமை செயலகத்தில் சென்னை மண்டல பொறுப்பு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சென்னை வெள்ள பாதிப்பு குறித்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!