பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்

1

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் மீட்புப் பணிகள் குறித்து, சென்னையில் அவசரகால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

அவர் அளித்த பேட்டி: பருவமழை துவங்கியதில் இருந்து இடி, மின்னல் தாக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். மழை குறித்த தெளிவான தகவல்களை அரசு வழங்கி வருகிறது. கோவை, நீலகிரியில் கனமழையால் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

நீலகிரி மண் சரிவில் சிக்கி உயிரிழந்த டிரைவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு

அமைச்சர் செங்கோட்டைன் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement