பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் :சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த தகுதியானவர்கள், சிறு தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை தொடங்கவும், விரிவுபடுத்தவும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தனிநபர் கடன் திட்டம் வாயிலாக நிதியுதவி பெறலாம். ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

அதிகபட்ச கடன்





25 லட்சம் ரூபாய்

திருப்பி செலுத்தும் காலம்





1½ ஆண்டு முதல் 6 ஆண்டுகள் வரை

வட்டி விகிதம்





ஆண்டுக்கு 7 முதல் 8 சதவீதம்

கடன் நிதி பங்களிப்பு





தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் — 85 சதவீதம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் — 10 சதவீதம்

பயனாளியின் சொந்த பங்கு — 5 சதவீதம்

கடன் தொகை - வட்டி - திருப்பிசெலுத்தும் காலம்

25,000 ரூபாய் வரை





வட்டி — 7 சதவீதம்

திருப்பிசெலுத்தும் காலம் — 6 காலாண்டுகள்

25,001 முதல் 50,000 ரூபாய் வரை





வட்டி — 7 சதவீதம்

திருப்பி செலுத்தும் காலம் — 8 காலாண்டுகள்

50,001 முதல் 1.25 லட்சம் ரூபாய் வரை

வட்டி — 7 சதவீதம்

திருப்பி செலுத்தும் காலம் — 12 காலாண்டுகள்

1.25 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை





வட்டி — 8 சதவீதம்

திருப்பி செலுத்தும் காலம் — 16 காலாண்டுகள்

5 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை





வட்டி — 8 சதவீதம்

திருப்பி செலுத்தும் காலம் — 20 காலாண்டுகள்

15 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை





வட்டி — 8 சதவீதம்

திருப்பி செலுத்தும் காலம் — 24 காலாண்டுகள்

எந்த தொழில்களுக்கு?





மளிகை மற்றும் சிறு விற்பனை கடைகள்

தையல் மற்றும் சேவை தொழில்கள்

கைவினை மற்றும் பாரம்பரிய தொழில்கள்

வேளாண்மை சார்ந்த சிறு தொழில்கள்

கவனிக்க





இது மானியம் அல்ல; குறைந்த வட்டி கடன் திட்டம்

அதிகபட்ச கடன் தொகை 25 லட்சம் ரூபாய்

கடன் தொகைக்கு ஏற்ப வட்டி மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம் மாறுபடும்

பயனாளி 5 சதவீதம் சொந்த பங்கு செலுத்த வேண்டும்

கடன் ஒப்புதல், விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் தொழில் திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும்

மேலும் விபரங்களுக்கு





தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்

இணையதளம்: tabcedco.tn.gov.in

கியு.ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.

Advertisement