பாகிஸ்தானில் காஸ் சிலிண்டர் விலை ரூ.3,500ஆக உயர்வு

38

லாகூர்: பாகிஸ்தானில் சமையல் சிலிண்டர் விலை, அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3,500 ரூபாய்.

நம் அண்டை நாடான பாகிஸ்தான், சமையல் எரிவாயு தேவையில், 70 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறது. ஈரான் - அமெரிக்கா போரால், தாப்தான் எல்லை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதால், தரை வழியாக நடந்த எரிவாயு வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், பாக்., முழுதும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், ஒரு கிலோ சமையல் எரிவாயு, 750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ஒன்றின் விலை, பாக்., ரூபாய் மதிப்பில், 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நம் ரூபாய் மதிப்பில், 3,425 ரூபாய்க்கு ஒரு சிலிண்டர் விற்கப்படுகிறது.

Advertisement