மாநில வில்வித்தை போட்டி மாணவர்கள் சாதனை

விழுப்புரம்: மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருச்சியில் மாநில அளவிலான ஓபன் வில்வித்தை போட்டி நடந்தது. இதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இந்த போட்டியில், 8 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் பருக்ஷித் அச்சுதன் முதலிடமும், நித்தின் இரண்டாமிடமும், மித்ரன் மூன்றாமிடமும் பிடித்தனர். 12 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வேதேஷு முதலிடமும், 14 வயதிற்குட்பட்ட பெண்கள் கனிஷ்கா முதலிடமும் பிடித்து சாதனைபடைத்துள்ளனர்.

இந்த மாணவர்களை வில்வித்தை பயிற்சியாளர் ஜேம்ஸ் ராஜா பாராட்டினார்.

Advertisement