மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை இணை கைத்தறி துணி நூல் கதர் துறை அரசு செயலர் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சரண்யா அறி தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் கதர் துறை அரசு செயலாளர் லில்லி கண்காட்சியை துவக்கி வைத்து கூறியதாவது : தமிழ்நாடு அரசு கைத்தறி துறை மற்றும் மத்திய அரசு ஜவுளி துறை, கைத்தறி வளர்ச்சி ஆணையம் மூலமாக மாநில கைத்தறி கண்காட்சி நடக்கிறது. இதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் 80 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைப்புகள் பங்கேற்று உள்ளன. 60 அரங்குகள் உள்ளன. 4 கோடி அளவிலான கைத்தறி துணி ரகங்கள் விற்பனைக்கு உள்ளன. . தமிழக அரசு பருத்தி ரகங்களுக்கு 30 சதவிகிதமும், பட்டு ரகங்களுக்கு ரூபாய் 300 அரசு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. என கூறினார்.

நேற்று முதல் 14 நாட்கள் கண்காட்சி நடைபெறும். விருதுநகர் மாவட்ட உதவி இயக்குனர் சேரன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்கள் கலந்து கொண்டனர்.

Advertisement