ஒட்டுச்சாவடி மைய ஆலோசனை கூட்டம்

திண்டிவனம்: ஓட்டுச்சாவடி மையங்களை மறுசீரமைப்பது குறித்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, திண்டினம், மயிலம் சட்டசபை தொகுதிகளிலுள்ள ஓட்டுச்சாவடி மையங்களை மறுசீரமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று (அக்.,22) காலை திண்டிவனம், ஜக்காம்பேட்டை சப்–கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. திண்டிவனம் சப்–கலெக்டர் காதர் அலி (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜன், உதவி தேர்தல் அதிகாரிகள் மலர்விழி, சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நகர அ.தி.மு.க.,செயலாளர் மணிமாறன், முன்னாள் அ.தி.மு.க.,ஒன்றிய செயலாளர்கள் விஜயன், விநாயகமூர்த்தி, பா.ஜ.,மாவட்ட துணை தலைவர் எத்திராஜ், சி.பி.ஐ., இன்பஒளி, காங்., வெங்கட், தே.மு.தி.க., நிர்வாகிகள் காதர்பாஷா, கனகராஜ், முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஓட்டுச்சாவடி மையத்தில், 1200 ஓட்டுக்களுக்கு மேல் உள்ளதை பிரிப்பது, வசதியில்லாத ஓட்டுச்சாவடி மையங்களை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து கட்சி பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement