காங்., முன்னாள் தலைவர் அழகிரி பிறந்த நாள் விழா

கடலுார்: தமிழக காங்., முன்னாள் மாநில தலைவர் அழகிரிக்கு, கடலுார் மாநகர காங்., கட்சியினர், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக காங்., முன்னாள் மாநில தலைவர் அழகிரி தனது 75 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதனை முன்னிட்டு சிதம்பரத்தில் அவரை கடலுார் மாநகர காங்., தலைவர் வேலுசாமி தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் காமராஜ், கிஷோர்குமார், மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement