பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா 2 இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பு
புதுடில்லி: நாக்பூரைச் சேர்ந்த முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தி நிறுவனமான சோலார் இன்டஸ்டிரீஸ், பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா 2 ட்ரோனை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு தயாரிப்பான இந்த ட்ரோனில் பகல், இரவு நேரங்களில் கண்காணிக்கும் வகையிலான நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 கிலோ எடைகொண்ட 'டேண்டம் ஷேப்டு -சார்ஜ்' வெடிகுண்டு இதில் உள்ளது. தொடர்ச்சியாக ஒரு மணிநேரம் பறக்கக்கூடிய திறன் கொண்டுள்ளது. 50 கி.மீ., தொலைவு வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிரிகள் ட்ரோன் சிக்னலை ஹேக் செய்ய முடியாதபடி, மின்னணு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதம் நாகாஸ்திரா 2 ட்ரோன் தொழில்நுட்ப சோதனை, ராஜஸ்தானில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது, நாகாஸ்திரா 2 ட்ரோன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும்
-
ராகுலுக்கு அரசியல் ஞானம் இல்லை; பாஜ விமர்சனம்
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; அக்.31 வரை இண்டிகோ விமான சேவை ரத்து
-
நெல்லை, கன்னியாகுமரிக்கு இன்று 'ரெட் அலெர்ட்': வானிலை மையம்
-
தமிழக வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
மீண்டும் பாஜ கூட்டணியில் சிரோமணி அகாலி தளம்; சுக்பூர் சிங் பாதல் சூசகம்
-
ஓடிபி, பாஸ்வேர்டுகளை யாரிடமும் பகிர கூடாது; வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தல்