அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார்; ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்
-நமது சிறப்பு நிருபர்-
துப்பறியும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. ரோஜர் மூர், சீன் கேனரி, திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் கிரெய்க் என பல நடிகர்களால் ஏற்கப்பட்டது ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம். ஒவ்வொரு நடிகரும் அந்த கதாபாத்திரத்தின் புகழை உச்சத்துக்கு கொண்டு சென்றனர் என்றால் மிகையில்லை.
இப்போது அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம் தயாரிப்புக்கான ஆரம்ப கட்ட பணிகள் நடக்கின்றன. டெனிஸ் வில்லென்யூவ், பாண்ட் திரைப்படத் தொடரின் அடுத்த பாகத்தை அமேசான் நிறுவனத்திற்காக இயக்கவிருக்கிறார். 'பீக்கி பிளைண்டர்ஸ்' தொடரின் எழுத்தாளரான ஸ்டீவன் நைட் திரைக்கதையை எழுதுகிறார்.
புதிய நடிகரை ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான தேர்வும் தொடங்கியுள்ளது. ஸ்கிரீன் டெஸ்ட் மற்றும் ஆடிஷன்கள் துவங்கி உள்ளனர். சாகச காட்சிகள், கேமரா முன் தோற்றம் மற்றும் வசனம் ஆகிய மூன்றில் நடிகர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
முன்னணியில் யார்?
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகர்களின் பெயர்கள் அடிபட்டாலும், கேலம் டர்னர் முன்னணியில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜாக் லோடன், ஜேக்கப் எலார்டி, ஹென்றி கேவில், ஜான்சன், ஹாரிஸ் டிக்கின்சன் ஆகியோர் பெயரும் பட்டியலில் பரிசீலனையில் இருப்பதாக பேசப்படுகிறது.
யாருக்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும், உங்கள் மனதில் தோன்றும் அதிர்ஷ்ட நபர் யார் என்பதை கமென்டில் பதிவிடுங்கள் வாசர்களே!
பலான சீன்களில் கூச்சப்படாம நடிக்க ரெடியா இருக்கணும் ....
Use AI and bring back Sir Seon Connary.
Tiger Shroff எல்லா வகையிலும் பொருத்தமானவர்!
தமிழகத்தின் ஒரே ஜேம்ஸ் பாண்ட் மறந்த நடிகர் திரு ஜெய்சங்கர் மட்டுமே
சீன் கானரி, பியர்ஸ் பிரஸ்னன் போன்றவர்கள் போல இன்னொருவர் வர முடியுமா என்று தெரியவில்லை, இருப்பினும் இந்தியாவில் ஜான் ஆபிரகாம் அதற்கு தகுதியான ஒரே நபர்.
நம்ம கமலகாசன் பெருத்தமாகவும், நெருக்கமாகவும் இருப்பார்..
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி. எப்படி ஒரு மக்கள் திலகமோ நடிகர் திலகமோ ஒரே ஜேம்ஸ் பாண்ட் திரு சீன கானரி மட்டுமே.
ஆமா ஜேம்ஸ் பாண்ட்னா யாரு?
முதல் புகைப்படத்தில் இருப்பவர் மிக பொருத்தமாக இருப்பார்
callum turner.... உருவ அமைப்பு ஐயன் ஃப்ளமிங் வடிவமைத்த பான்ட் உடன் ஒத்துப் போகிறது