தொடர்ந்து சரிவடையும் தங்கம் விலை; 5 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 சரிவு
-நமது சிறப்பு நிருபர்-
சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த திங்கள் கிழமை (அக்டோபர் 19) தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய அதிகரித்து 13,570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
செவ்வாய் கிழமை (அக்டோபர் 20) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 490 ரூபாய்க்கும் விற்பனைஆனது. வெள்ளி விலை ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நேற்று முன்தினம் (அக் 21) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 390 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 230 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரம்
நேற்று (அக்டோபர் 22) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 235 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 225 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
இன்றைய நிலவரம்
இன்று (அக்டோபர் 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 175 ரூபாய் குறைந்து 13,060 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 4,080 ரூபாய் சரிந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 225 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளக் செய்யவும்
பிரத்யேக வீடியோ!
தங்கம் விலை கடும் சரிவு; தீபாவளிக்கு நகை வாங்கலாமா? இன்றைய தங்கம் விலை நிலவரத்தை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தங்கம் விலை ஏறினாலும் சரி, இல்லை இறங்கினாலும் சரி. இந்த போட்டோவில் உள்ள அம்மா மட்டும் எப்போதுமே நகை வாங்கிக் கொண்டே இருக்கும் போல?
கடைசி கட்டத்தில் தங்கம் வாங்குனவங்களுக்கு அதிகமான நஷ்டம் என்ஜாய்
பல மாதங்களாக இந்த புகைப்படத்தையே வெளியிடுகிறீர்கள். மற்றவர்களுக்கும் வாய்ப்பளியுங்களேன். ப்ளீஸ்.