சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-நமது சிறப்பு நிருபர்-
மேற்காசிய நாடான ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகள், சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்களை குறிவைத்து, தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
தம்மாம், ரியாத் விமான நிலையங்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், இரண்டு இந்தியர்கள் உயிரிழந்தனர். விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள், ரியாத் மற்றும் தம்மாமை இணைக்கும் தங்களது விமான சேவைகளை ரத்து செய்வதை நவம்பர் 7 வரை நீட்டித்துள்ளன.
பயணத்தின்போது வழங்கப்பட்ட தொடர்பு எண்கள் வாயிலாக, பயணியருக்கு தகவல்கள் நேரடியாக அனுப்பப்பட்டு வருவதால், பயணத்திற்கு முன், அதிகாரப்பூர்வ இணையதளத்தில், விமானத்தின் தற்போதைய நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
ரியாத் நகருக்கான, 'இண்டிகோ' விமானங்கள், வரும் அக்., 31 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜெட்டா, தமாம் மற்றும் மதீனா ஆகிய நகரங்களுக்கான விமானங்கள், வரும், அக்., 27 வரை ரத்து செய்யப்பட்டன.
ரியாத்துடன் இணைக்கும் விமானச் சேவைகளின் தடையை நவம்பர் 30 வரையிலும், ஜெட்டாவுடன் இணைக்கும் விமானச் சேவைகளின் தடையை நவம்பர் 10 வரையிலும் நீட்டித்துள்ளதாக அகசா ஏர் தெரிவித்தது.
பாதுகாப்பு ஒப்பந்தம் போட்ட பாகிஸ்தானும், துருக்கியும் ஏன் இன்னும் படை அனுப்பவில்லை? ஈரானை எதிர்க்க பயமா? சவுதியை நட்டாற்றில் விட்டு விட்டார்கள்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்மேலும்
-
போதை கடத்தல் கும்பலுக்கு மரண அடி; மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
-
தமிழகத்தில் பரவலாக மழை; அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே?
-
கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் 'செப்' தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்