5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
- நமது நிருபர் -
தமிழகத்தில், காலியாக உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எதிர்கொள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய நிலையில், முன்னாள் அமைச்சர் மகேஷின் கைது, அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளில், இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து, தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கடந்த, 24ம் தேதி, ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், தொகுதி வாரியாக தேர்தல் பணி, வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, திருச்சி கிழக்கு தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, விராலிமலை தொகுதிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலர் கே.கே.செல்லப்பாண்டியன், கரூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலர் ஆவுடையப்பன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., இரண்டாம் இடத்தை கைப்பற்றியது. அடுத்த ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தலில், வெற்றி பெறுவதற்காக, தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்க, ஸ்டாலின் திட்டமிட்டார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதும், தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதுடன், மாவட்ட செயலர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், கட்சி தலைமைக்கு வேட்பாளர்களையும் பரிந்துரை செய்துள்ளனர்.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு அன்பில் மகேஷ், கரூர் தொகுதிக்கு அசோக்குமார், விராலிமலை தொகுதிக்கு எம்.எம்.அப்துல்லா, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு ரவீந்திரநாத், பெருந்துறை தொகுதிக்கு முத்துசாமி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியானது.
இந்நிலையில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டது, அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கில் நடவடிக்கை எடுத்து, அக்கட்சியின் வேகத்தை கட்டுப்படுத்த, த.வெ.க., திட்டமிட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
வாசகர் கருத்து (11)
JEYASINGH - ,இந்தியா
29 அக்,2026 - 20:08 Report Abuse
TAVAKA will get a great setback in the five constituencies. Law and order problem, child abuse, corruption, horse trading, unwanted reels, price hike, qnd misadministration will reflect in the fourth coming election. 0
0
Reply
Thanjai Siva .Elangovan. - Thanjavur,இந்தியா
28 அக்,2026 - 18:26 Report Abuse
இப்போது முதல்வர் விசை தானே ..ஸ் டாலின் எப்படி வியூகம் வகுப்பார் 0
0
Reply
S Subramanian - ,
28 அக்,2026 - 16:47 Report Abuse
Here is a draft for your suggestion to Mr. Vijay:-
Suggestion to Thalapathy Vijay - Chief Minister and TVK Chief
Respected Sir,
My humble suggestion regarding the forthcoming bye-elections to the Assembly.
Please start scouting for talent right now to field candidates. Kindly young, educated, talented, knowledgeable and fearless youngsters who can perform with authority in the Assembly.
We need candidates who can debate fearlessly and defy the likes of those who advise wrongly with facts and logic.
Please do not field sundry whistles who are merely fans and know nothing of politics or governance. The people expect a strong, credible alternative with capable leaders.
Your focus on merit and youth will be your biggest strength.
With best wishes for your success 0
0
BHARATH - TRICHY,இந்தியா
28 அக்,2026 - 17:26Report Abuse
YOU ARE NOT ASHAMED AS A EDUCATED... 0
0
Reply
V SRIDHARAN - ,
28 அக்,2026 - 10:20 Report Abuse
தி.மு க உடன் பிறப்புகள் எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள்... ஜந்துக்கள் .... ! 0
0
Reply
Dominic - mumbai,இந்தியா
28 அக்,2026 - 08:29 Report Abuse
Sure veththi T.V.K. 0
0
Reply
அரசு - ,
28 அக்,2026 - 07:46 Report Abuse
இவரது அதிரடி திட்டம் தெருத் தெருவாக சென்று road show நடத்துவது. 0
0
Reply
முருகன் - ,
28 அக்,2026 - 06:41 Report Abuse
இவர்கள் இல்லை என்றால் வேலை செய்ய பலர் திமுகவில் திமுக ஒரு கடல்
தவெக பெரும் மழையில் வந்த
...... 0
0
thiru - ,
28 அக்,2026 - 09:04Report Abuse
முருகன்..திமுக ஆட்சி
.கொளத்தூர் சாட்சி..மரண அடி.. 0
0
tamil - ,
28 அக்,2026 - 09:11Report Abuse
கடல் எப்படி புழல் சென்றது..முருகா 0
0
நண்டு முருகன், வாலயம் - ,
29 அக்,2026 - 07:49Report Abuse
தீய மு க கூவம் அப்டின்னு சொல்கிறார் இவர் 0
0
Reply
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு
Advertisement
Advertisement