வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
தர்மபுரி; தர்மபுரி அருகே, தேசிய நெடுஞ்சாலை வழியாக, மினி சரக்கு வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்திய இருவரை, தர்மபுரி டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.
தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேசன் எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று காலை, 7:30 மணிக்கு கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டாடா இன்ட்ரா மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தடைசெய்யப்பட்ட, 225 கிலோ எடைகொண்ட, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சரக்கு வாகனத்தில் வந்த, சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார், 32, ரமேஷ், 55 ஆகிய இருவரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement