வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்புத்துறையினர் ஒத்திகை
பென்னாகரம்: பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக தீயணைப்பு துறையினர் நேற்று, ஒத்திகையில் ஈடுபட்டனர்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். நிலைய அலுவலர் சந்தோசம் தலைமையில், பென்னாகரம் தீயணைப்பு அலுவலர்கள் பங்கேற்றனர்.
மழை மற்றும் இடி மின்னல் ஏற்படும் சூழலில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி மீட்கும் முறை, மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து, தீயணைப்பு படையினர் ஒத்திகை மற்றும் செயல்விளக்கம் அளித்தனர். மேலும் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், தாலுகா அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
அரசின் திட்டங்கள் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும்: பிரதமர் மோடி உறுதி
-
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்; ராஜ்நாத்சிங்
-
கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
-
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம்; குஜராத் அணியில் தமிழக வீராங்கனை கமாலினி... அணிகளின் முழு விபரம்
-
திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு