வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில், வருவாய்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் முருகன் முன்னிலை வகித்தார். இதில், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ., க்கள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள், தொலைதொடர்பு நிறுவன ஊழியர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வருவாய் ஆய்வாளர்கள் கிராமங்கள் தோறும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்.

வி.ஏ.ஓ., க்கள் கிராம உதவியாளர்களை ஒருங்கிணைத்து மேலாண்மை குழு அமைக்க வேண்டும்.

குறுவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், சமுதாய கூடங்கள், மண்டபங்களில் மின்சாரம், குடிநீர், கழிவறை வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரை வழங்கப்பட்டது.

Advertisement