விபத்து வழக்கு மருத்துவர் அறிக்கை சிறப்பு தீர்வு முகாம்
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் விபத்து வழக்கு குறித்த மருத்துவ அறிக்கை சிறப்பு தீர்வு முகாம் நடந்தது.
கல்லுாரி அரங்கில்,விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி உத்தரவின் பேரில் விழுப்புரம் நீதிபதி ராஜ மகேஷ் தலைமையில் நீதிபதிகள் விழுப்புரம் பாலசுப்ரமணியன், திண்டிவனம் சிவசுப்ரமணியன், செஞ்சி கதிரவன், கல்லுாரி டீன் லுாசி நிர்மல் மெடோனா ஆகியோர் முகாமை நடத்தினர்.
விழுப்புரம் சார்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் முகாமை ஆய்வு செய்து விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் விபத்து வழக்கு தொடர்பான மருத்துவ குழுவினர் தரும் அறிக்கைகள் அதிகமாக நிலுவையில் இருப்பது குறித்தும், வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கைகளை விரைந்து கொடுக்க ஆலோசனை வழங்கிப் பேசினார்.
முகாமில் மருத்துவ கண்காணிப்பாளர் தரனேந்திரன், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், மருத்துவக் குழு பேராசிரியர்கள் பாலமுருகன், அரவிந்தன், பிரகதீஷ், மருத்துவக் குழுவில் பங்கேற்றுள்ள இணைப் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
அறநிலையத்துறையின் இணை ஆணையர் 18 பேர் பணியிட மாற்றம்; 3 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு
-
த.வெ.க., கூட்டணி அரசை அடிக்கடி விமர்சிப்பதா? ஜோதிமணி எம்.பி., மீது காங்., நிர்வாகிகள் காட்டம்
-
ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்தப்படலாம்; அதிபர் டிரம்ப் சூசகம்
-
போலீஸ் ஏட்டுவின் விஸ்வரூப ஊழல்: ரூ.65 கோடிக்கும் மேல் சொத்து குவிப்பு
-
ரூ.5 லட்சம் லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ
-
தேர்தல் நெருங்குவதால் டிரம்ப் பல்டி: கனடா இறக்குமதி மீதான வரிகள் திடீர் குறைப்பு