முதல்வர் குறித்து அவதுாறு

முதல்வர் குறித்து அவதுாறு: தி.மு.க., உறுப்பினர் கைது

சென்னை: மயிலாப்பூர், நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரசன்யா, 30. இவர், த.வெ.க., மயிலாப்பூர் கிழக்கு மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர். இவர், கடந்த ஜூன் 24ம் தேதி கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘எக்ஸ்’ தளத்தில், ‘ராஜகோபால்பாண்டி’ ஐ.டி., கொண்ட நபர், தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதுாறான கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

போலீசாரின் விசாரணையில், திருவான்மியூர், லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜகோபால், 40, என்பவர், முதல்வர் விஜய் குறித்து அவதுாறான கருத்துக்களை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. மேலும் தி.மு.க.,வில் உறுப்பினராக உள்ளதும் தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement