மாசில்லா பழநி பகுதிக்கானது. சூழல் பாதுகாப்பில் வேரூன்றிய ‘விழுதுகள்’ அமைப்பு
பழநி
பழநியில் பருவ மழை துவங்குவதற்கு முன்பே நகராட்சி, கோயில் நிர்வாகத்துடன் இணைந்து, ‘விழுதுகள்’ அமைப்பினர் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதுடன், மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதன் அவசியம் குறித்து மாணவ, மாணவிகள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சூழல் பாதுகாப்பில் வேரூன்றி உள்ளது.
பழநி கிரி வீதியில் கோயில் நிர்வாக அனுமதியுடன் விழுதுகள் அமைப்பினர், கடம்பு, மகிழம், அரசு, ஆழம், வேம்பு, இலுப்பை, சரக்கொன்றை, எழிலைப்பாலை, நாகலிங்கம், நாவல், பாதாம், புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, பராமரித்து வருகின்றனர். மழைக்காலம் துவங்குவதற்கு முன் மரக்கன்றுகளுக்கு தினமும் லாரி மூலம் கோயில் நிர்வாகம் சார்பில், தண்ணீர் ஊற்றப்படுகிறது. பழநி முருகன் கோயில் மலையில் விதைப்பந்துகள் துாவப்பட்டன. நகராட்சியுடன் இணைந்து நர்சரி உருவாக்கப்பட்டு உள்ளது. பழநி பெரியப்பா நகர் குப்பை கிடங்கு, கோடைகால நீர்த்தேக்க வளாகம் ஆகியவற்றில் மரக்கன்றுகள் மழைக் காலத்திற்கு முன்பே நடப்பட்டன.
விதைப்பந்துகள் துாவல்
விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி கூறியதாவது: 2018ல் இருந்து வையாபுரி குளத்தில் உள்ள தெப்பக்குளத்தை கண்டறிந்து சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளோம். பழநி கிரி வீதியில் மரக்கன்றுகள் நடுதல், பழநி முருகன் மலையில் விதைப் பந்துகள் தயாரித்து துாவும் பணிகளை செய்துள்ளோம். 20 ஆயிரம் பனை விதைகள் துாவப்பட்டு உள்ளன. 250 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு உள்ளது. எங்கள் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடுவது மட்டுமில்லாமல், நீர்நிலைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளையும் செய்து வருகிறோம். பழநி நகராட்சியுடன் இணைந்து ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு உள்ளோம். முதற்கட்டமாக 10 ஆயிரம் மரக்கன்றுகளை உருவாக்கி வருகிறோம். மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் எங்களுக்கு உறுதுணையாக உள்ளது., என்றார்.
மன நிறைவு
செந்தில் ராம்குமார், நகராட்சி சுகாதார அலுவலர், பழநி: பழநியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஏற்பட்ட கஜாப் புயலில் கோடை நீர்த்தேக்கத்தில் இருந்த நுாற்றுக்கணக்கானமரங்கள் வேரோடு சாய்ந்தன. அந்த இழப்பை ஈடு செய்ய பல்வேறு வகையில் முயன்று வருகிறேன். 2000 மரங்களுக்கு மேல் பழநி நகராட்சி பகுதியில் நடப்பட்டுள்ளது. குறிப்பாக பெரியப்பா நகர் கிடங்கு, கோடைகால நீர்த்தேக்கப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரித்து வருகிறோம். இதனால் எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையை விட்டு செல்லும் மன நிம்மதி, மன நிறைவு கிடைக்கிறது., என்றார்.
மேலும்
-
பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்
-
முளைக்குமா வயலில் தண்ணீர் தேங்குவதால் விதை நெல் இளையான்குடியில் மழையால் விவசாயிகள் கவலை
-
தற்காலிக சீரமைப்பு பணி வீண் சேதமடையும் சாலைகளில் அவதி
-
சேதமடைந்த பாசன கால்வாய் சீரமைத்தால் விவசாயிகள் பயன்
-
பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்
-
ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!