புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் அன்னாபிேஷகம்

திட்டக்குடி: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரருக்கு அன்னாபிேஷகம் வெகு விமரிசையாக நடந்தது.

இதையொட்டி, இன்று (அக்.,25) காலை 8:00 மணியளவில் மூலவர் வரதராஜ பெருமாள் தாயார் ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.

மதியம் 2:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 3:00 மணிக்கு சுவாமிக்கு அன்னம் சாற்றி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, சிவபுராணம், வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. இரவு 8:30 மணியளவில் அன்ன அர்த்தசாம பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சமபந்தி போஜனம் நடந்தது.

பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.

Advertisement