28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும், 28ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி கோட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 28ம் தேதி காலை, 11:00 மணிக்கு சப் – கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. சப் – கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.

அதில், விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடர்புடைய குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். இத்தகவலை சப் – கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Advertisement