உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘இலக்கியம் தரும் வாழ்வியல் இன்பம்’ தலைப்பில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது.

சங்க ஆய்வு வளமையர் ஜான்சிராணி வரவேற்றார். தஞ்சை பான்செக்கர்ஸ் மகளிர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் சத்தியா பேசுகையில், ‘‘தமிழரின் பண்பாடு, விழுமியம், வரலாறு, இயற்கையுடன் இயைந்த வாழ்வு, உறவுமுறைகளின் மேம்பாடு, தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றை இலக்கியம் கற்றுத் தருகிறது. மாணவர்கள் இலக்கியங்களை படிக்க வேண்டும்,’’ என்றார்.

கார்த்திகேயன் பார்கவிதையின் ஆய்வு நுால் ‘நறுங்கடம்பு’, கவிஞர் பொன்விக்ரமின் புதின நுால் ‘துாரிகை துாவிய வண்ணங்கள்’, நேருவின் கட்டுரை நுால் ‘கனவு போலத்தான் நடந்தது’, அண்ணாதுரையின் கவிதை நுால் ‘கனவுகளின் மொழி’ ஆகிய 4 நுால்களின் அரங்கேற்றம் நடந்தது. விஜிசுப்பிரமணியன், இளங்கோவன் கார்மேகம், கவிஞர்கள் மூரா, மகாலட்சுமி ஆகியோர் நுால் மதிப்புரை வழங்கினர். சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார்.

Advertisement