திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் 'லீவு'!

சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விடிய விடிய கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது.

குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இன்று வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய உள்ளது.

கனமழை காரணமாக திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.,23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement