திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 16 பேர் பலி, 32 பேர் காயம்

தைபே: திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டரில் 7 ஆக பதிவானது. வடக்கு பகுதியில் நகு என்ற இடத்தில் இருந்து 191 கிலோமீட்டர் கிழக்கு-வடகிழக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்; 32 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 339 வீடுகள் இடிந்து தடைமட்டமானது என அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீடுகளை இழந்தவர்களுக்குத் தற்காலிக தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,400 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்படுத்திய நிலையில், அந்த பகுதி அருகே உள்ள திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisement