ஸ்டேஷன் துாய்மைக்கு ஒத்துழைப்பு அவசியம்
மதுரை: ‘‘ரயில்வே ஸ்டேஷன்களின் துாய்மைக்கு பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம்,’’ என, மதுரை ஸ்டேஷனில் நடந்த துாய்மை விழிப்புணர்வு நிகழ்வில் கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.
அவர் பேசியதாவது: இக்கோட்டத்தில் 16 ஸ்டேஷன்களில் நவீன இயந்திரங்கள் மூலம் துாய்மை பணிகள் நடக்கின்றன. ரயில் பெட்டிகளில் ‘பயோ டாய்லெட்’ அறிமுகத்திற்குப் பின் தண்டவாளங்களில் மனித கழிவுகள் இல்லை. முக்கிய ரயில்களில் உள்ள பயோ டாய்லெட்களில் காற்றழுத்தம் மூலம் தண்ணீரை பீய்ச்சி சுத்தம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நடமாடும் துாய்மை பணியாளர் குழு மூலம் பயணத்தின் போதே பெட்டிகள் சுத்தம் செய்யப்படுகின்றன. பராமரிப்பு மையங்களில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. துாய்மை குறித்த புகார்கள் ‘ரயில் மித்ரா’, ‘ரயில் மதாத்’ போன்ற தளங்கள் மூலம் பெறப்பட்டு தீர்வு காணப்படுகிறது. ஸ்டேஷன்களை அசுத்தப்படுத்துவோருக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்டேஷன்களில் துாய்மையை பராமரிக்க பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
மேலும்
-
கோவையில் கொட்டி தீர்த்தது கனமழை
-
புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் அன்னாபிேஷகம்
-
மாசில்லா பழநி பகுதிக்கானது. சூழல் பாதுகாப்பில் வேரூன்றிய ‘விழுதுகள்’ அமைப்பு
-
28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
-
பொள்ளாச்சியில் அமைகிறது ‘பிலிம் சிட்டி ’: வரும் 31ல் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை
-
தமிழக ஆசிரியர் கூட்டணி கொடியேற்று விழா