வலுவான இந்தியாவை கட்டியெழுப்ப இளைஞர் சக்தியை வளர்க்க வேண்டும்; பிரதமர் மோடி

1

புதுடில்லியில் அக்டோபர் 23ம் தேதி முதல் அக்டோபர் 25ம் தேதி வரை சின்மயா அம்ரித் மஹோத்சவ் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்து பேசினார். அப்போது சுவாமி சின்மயானந்தாவுடனான சந்திப்பை நினைவு கூர்ந்தார் .

பிரதமர் மோடி பேசியதாவது;

வலிமையான, திறமையான இந்தியாவை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பது குறித்து எங்களின் உரையாடல் இருந்தது. 1993ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பதற்காக அவரை சந்தித்தேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

ஆனால், துரதிருஷ்டவசமாக ஆகஸ்ட் 3ம் தேதி சுவாமி சின்மயானந்தா காலமானார். சிகாகோ மாநாட்டில் நான் பங்கேற்றேன். அங்கு நாங்கள் அனைவரும் அவர் இல்லாததை உணர்ந்தோம். இறுதி சந்திப்பின் போது, நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பும், அதிகாரமும் அவசியம், இளைஞர் சக்தியை வளர்க்க வேண்டும் என்பதை முன்னிறுத்தியே எங்களின் உரையாடல் இருந்தது.

சுவாமி சின்மயானந்தாவின் சந்தித்த பின்னரே, குஜராத்தின் முதல்வராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை மக்கள் எனக்கு வழங்கினர்.

சின்மயா என்பது ஒரு இயக்கம் அல்ல, தத்துவத்தையும், தொலைநோக்கு பார்வையையும் கொண்டது. நம் தேசம் கலாசாரத்தின் பிறப்பிடம். தேசமே நம் வாழ்வின் அடித்தளம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement