டிரம்ப் மருமகன் வங்கிக்கணக்கிற்கு ரகசியமாக வந்த பணம்: நெதர்லாந்து உளவு அமைப்பு பகீர் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர். அமெரிக்காவின் தற்காலிக சமாதான பேச்சுவார்த்தை குழுக்களில் இடம்பெற்றுள்ளார்.
அவரின் ஐபோனை நெதர்லாந்தை சேர்ந்த உளவு அமைப்பு ரகசியமாக உளவு பார்த்தது. ரஷ்ய ராணுவ உளவுத்துறையுடன் தொடர்புடைய சர்வரை ஹேக்கர் வாயிலாக ஆய்வு செய்த போது அதில் பல தகவல்கள் கிடைத்ததாக உளவுத்துறை தெரிவித்தது.
அந்த தகவல்கள் என மேத்யூ கோலன் என்பவர் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டதாவது:
அஜர்பைஜான் வாயிலாக நடந்த பணப்பரிமாற்றம் மூலம் கிடைத்த 750 மில்லியன் டாலர் பணம் யுஏஇ தொடர்படைய வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. அபுதாபி வங்கியில் முதலில் துவங்கப்பட்ட இந்த கணக்கு. யுஏஇ அரசு அதரவுடன் செயல்படும் தொண்டு நிறுவனம் ஒன்றின் தொடர்புடையது. இந்த கணக்கு ஜாரெட் குஷ்னர் துவக்கவில்லை என்றாலும், கையெழுத்திடும் அதிகாரம் அவரிடம் இருந்தது.
டிரம்ப் முதல்முறையாக அதிபராக இருந்த காலத்தில், வெளியுறவு கொள்கை நிதி என்ற திட்டத்திற்கு நிதி அளிப்பது குறித்து ஜாரெட் குஷ்னர், யுஏஇ அதிபர் முகமது பின் ஜாயத் மற்றும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் ஆலோசித்தார். இந்த திட்டத்திற்கு நிதி அளித்தால், உதவி செய்ய டிரம்ப்பிடம் வலியுறுத்துவதாக சவுதி அரேபியா பட்டத்து இளவரசரிடம் ஜாரேட் குஷ்னர் உறுதியளித்தார்.
ஆனால், அவர்களின் முயற்சி கைகூடவில்லை. இருந்தாலும், குஷ்னருக்காக 2 பில்லியன் டாலர் ( ரூ.18,500 கோடி இந்திய மதிப்பில்) பணம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் செலுத்தப்பட்டது.தொடர்ந்து அங்கிருந்து 1 பில்லியன் டாலர் பணம், அஜர்பைஜான் வழியாக, இஸ்ரேலில் உள்ள வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. இன்னும் சில டாலர் மதிப்பிலான பணம் சைப்ரஸ் வழியாக மாற்றம் செய்யப்பட்டது. எதற்காக மாற்றப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை என அந்த செய்தியில் கூறப்பட்டது.
ஜாரேட் குஷ்னர் மறுப்பு
இந்த குற்றச்சாட்டை மறுத்த ஜாரேட் குஷ்னர்,'' அப்பட்டமான மற்றும் முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகள். இதனை கொண்ட ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி வெளியிடப்பட்டது. குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபத்தமானது. அதனை நிரூபிக்க ஒரு ஆதாரத்தை கூட வழங்கவில்லை. குற்றச்சாட்டை நிரூபிக்க, வங்கி அறிக்கை, பணப்பரிமாற்ற பதிவுகள், கணக்கு எண் விவரம், பரிவர்த்தனை நடந்த தேதி என எதுவும் கூறவில்லை எனக்கூறியுள்ளார்.
ட்ரம்ப் வெளியேறிய பின் விசாரணை நடக்கும்.ட்ரம்ப் அடித்த கொள்ளை வெளியே வரும்.
ஏதோ பெரிய லெவல் பிராடு நடந்து இருக்கிறது? தேன் எடுத்தவன் புறங்கைய்யை நக்காமல் இருப்பானா? இதற்கு உண்மை விளம்பியின் நோபல் எதிர் பாரப்பவரின் பதில் என்ன?
டிரம்ப் ஒரு அமெரிக்க கட்டுமரம்
திமுகவின் மாப்பிள்ளை சார் போல அமரிக்க மாப்பிள்ளை சார். பல்வேறு குணங்களில் ஒத்துப் போகுது.
இரண்டும் நல்லவே ஒத்து போகுது?மேலும்
-
மதியம் முதல் தொடர்ந்து தட்டியெடுத்த மழை வெள்ளக்காடாக மாறிய தார் சாலைகள்
-
நல்ல காலம் பிறக்குது! குண்டும் குழியுமான சாலைகளுக்கு ரூ.75 கோடியில் சீரமைக்க திட்டம்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்
-
வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்த எதிர்பார்ப்பு : விவசாய பணிக்கு உதவ விவசாயிகள் வேண்டுகோள்
-
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மின்தடையால் பயணிகள் அவதி: தனி 'டிரான்ஸ்பார்மர்'கள் அமைக்க வலியுறுத்தல்