மாவட்டத்தில் தொடரும் மழை

கரூர்:தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை கடந்த, 14ல் தொடங்கியது. இதையொட்டி, பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த, 15 முதல் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால், மானாவாரி நிலங்களில் எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் பணிகளை தொடங்கியுள்ளனர்.

நேற்று கரூரில் பரவலாக மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) அரவக்குறிச்சி, 32, அணைப்பாளையம், 9, க.பரமத்தி, 6, கிருஷ்ணராயபுரம், 1, மாயனுார், 1, பாலவிடுதி 5 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும், 58 மி.மீ., மழையும், சராசரியாக, 4.83 மி.மீ., மழையும் பதிவானது.

Advertisement